பிறந்து 3 நாள்களேயான குழந்தையின் அழுகையை நிறுத்த வாயில் டேப்; செவிலியர் மீது நடவடிக்கை! – Mumbai hospital nurse taps 3-day-old baby’s mouth to stop crying
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை சரியாக கவனிக்கமாட்டார்கள் என்ற பொதுவான புகார் இருந்து வருகிறது. இந்நிலையில், மும்பையில் நர்ஸ் ஒருவர் பிறந்து மூன்று நாள்களே ஆன பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த, அதன் வாயில் டேப்பை ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை, பாண்டூப் மேற்கு பகுதியில் சாவித்ரிபாய் புலே மகப்பேறு மருத்துவமனை இருக்கிறது. இம்மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றுபவர் சவிதா போயர். இங்கு பிரியா காம்ப்ளே என்ற பெண், பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஆண் குழந்தை…








