Daily Archives: May 15, 2023

அரசு அலுவலகத்தில் நடந்த அகோரி பூஜை… எஸ்.பி அலுவலகத்தில் புகார்..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் நிர்வாண அகோரியை அழைத்து வந்து அரசு அலுவலகத்தில் பூஜை நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க திவிக வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் ஆண் பெண் இருபாலரும் பணிபுரிந்து வரக்கூடிய சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கேயம் நகராட்சி அரசு அலுவலகத்தில் அகோரியை வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.இதுதொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் பொதுமக்கள் கூடும் இடத்தில்…

IPL 2023 | ஐபிஎல் பிளே ஆஃப் – கொல்கத்தா வெற்றியால் நெருக்கடி நிலையில் சிஎஸ்கே? | IPL Play Off | CSK in crisis due to defeat with Kolkata

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேனின் அற்புதமான சுழற்பந்து வீச்சாலும், ரிங்கு சிங்குவின் பொறுப்பான பேட்டிங்காலும் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள்,…

Vikatan Plus – 21 May 2023 – ‘எங்க அடையாளமே நெய் ரோஸ்ட்தான்!’ – திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் | trichy Tiruvanaikoil Parthasarathy Vilas

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலரும், தரிசனத்தை முடித்துவிட்டு நேராக பார்த்தசாரதி விலாஸிற்கு ஒரு விசிட் அடிக்காமல் திரும்புவதில்லை.50 ரூபாய்க்கு சுடச்சுட முறுகலான நெய் ரோஸ்ட், 20 ரூபாய்க்கு மிருதுவான சாம்பார் வடை என சுவையிலும், விலையிலும் தனித்து நிற்கும் பார்த்தசாரதி விலாஸுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. காரசாரமாக இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோரும் சாப்பிடும் வகையில் பக்குவமாகத் தயாரித்துப் பரிமாறுகிறார்கள். தன்னுடைய 80-வது…

Dhoni: "எல்லாருக்கும் நன்றி, மீண்டும் சந்திப்போம்!" தோனியின் பேச்சும் சி.எஸ்.கே-வின் நன்றி விழாவும்!

சேப்பாக்கத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. கொல்கத்தா அணி சார்பில் கேப்டன் நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் சிறப்பாக ஆடியிருந்தனர். ரிங்கு சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணங்கள் குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி பேசியிருந்தார். தோனி பேசுவதற்காக மைக் முன் வந்து நிற்க, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்வியே தோனிக்கு கேட்கவில்லை. இதனால் ஸ்பீக்கர்…

6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர்.கொல்கத்தா பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சு காரணமாக சென்னை அணி வீரர்களால் எளிதாக ரன்கள் குவிக்க முடியவில்லை. ருதுராஜ் 13 பந்துகளில் 17 ரன்னும்,…

ஆசைப்பட்டு முழு பலாப்பழம் வாங்கியாச்சு.. எப்படி வெட்டுவது என தெரியலையா..? பிசுபிசுப்பு ஒட்டாமல் ஈசியா எடுக்க டிப்ஸ்..!

பலாப்பழத்தின் தோல் எவ்வளவு கரடுமுரடான இருக்கிறதோ அதை விட பல மடங்கு அதன் உள்ளே உள்ள பழம் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்ததாக இருக்கும்.வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பலாப்பழத்தை காயாக இருக்கும்போதே வெட்டினால், அதை காய்கறி போல் சமையலுக்கு பயன்படுத்தலாம். அதே நேரத்தில் பழுத்தால் பழமாகவும் சாப்பிடலாம். சந்தையில் பலாப்பழம் வாங்கும்போது, முழு பழமாக குறைந்த விலையில் இருந்தாலும் அதை உறித்து எடுக்க தெரியாமல் அதிக விலையானாலும் உறித்த சுளையாகவே வாங்கி வருவார்கள். ​​இனி அந்த சிரமம்…

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு, தனிப்படை அமைத்த ஐஜி – என்ன நடக்கிறது?

3 மணி நேரங்களுக்கு முன்னர்மரக்காணத்தில் நேற்று கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலன் பாதிக்கப்பட்ட 27 பேர், மரக்காணம், முண்டியம்பாக்கம், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் நேற்று அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி…