Daily Archives: May 3, 2023

“தினசரி 5,000 லோடு கனிமவளம் கடத்தல்; லஞ்சம் வாங்கும் திமுகவினர்” – வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு | Velumani slams DMk over illegal mines smuggling

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு கனிமவள கடத்தல் நடக்கிறது.  தினசரி 4,000 முதல் 5,000 லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. ஆனால் திமுக அரசு அதை  கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திமுகவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாகனத்துக்கும் அதிக லஞ்சம் பெற்று கனிமங்களை விற்கிறார்கள். கனிமவளம் கடத்தல்கனிமவள கொள்ளை தொடர்பாக சட்டமன்றத்திலேயே அதிமுக சார்பில் கடுமையாக பேசியுள்ளோம். கோவையை புறக்கணிக்கும் திமுக அரசை மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் புறக்கணிப்பார்கள். Source link

நினைவிருக்கா | 2009-ல் விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருதை விட்டுக் கொடுத்த கம்பீர்! | Do you remember Gambhir gave up man of the match award to Virat Kohli in 2009

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் பெங்களூரு வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு பெங்களூரு வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ ஆலோசகர் கவுதம் கம்பீர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் 100 சதவீதம் அபராதம் விதித்தது ஐபிஎல். அவர்கள் இருவரும் களத்தில் அப்படி நடந்து கொண்டது பலரையும் முகம் சுளிக்க செய்திருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட…

ஆப்பிள் CEO-வை கவர்ந்த வடா பாவ்.! வீட்டிலேயே செய்வதற்கான சிம்பிள் ரெசிபி..

சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், மும்பையில் நடிகை மாதுரி தீட்சித்துடன் சேர்ந்து சில உள்ளூர் உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தார். நடிகை மாதுரி மற்றும் டிம்குக் இருவரும் Swati Street என்ற கடைக்கு சென்றனர்.Tim Cook இங்கு தான் முதன் முதலில் வடா பாவ்-ஐ ருசித்து மகிழ்ந்துள்ளார். நடிகை மாதுரி தான் டிம் குக்-உடன் Vada Pav சாப்பிட்டு ருசித்தது குறித்து ஃபோட்டோவுடன் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். இதனை…

பாலியல் சுரண்டல் படங்கள், காணொளியை பிறரது அனுமதி இல்லாமல் எடுக்க தடை – ஜப்பானில் வருகிறது சட்டம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்த ஜப்பான் அதன் தண்டனைச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர உத்தேசித்து வருகிறது.கட்டுரை தகவல்சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலின்றி அவர்களை பாலியல் ரீதியாக சுரண்டும் வகையிலான படங்கள் அல்லது காணொளியாக பதிவு செய்வதற்கு எதிராக ஜப்பானில் முதல் முறையாக தேசிய அளவிலான சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை அந்நாட்டு எம்.பிக்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர். பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் ஆபாச படம் அல்லது காணொளியை பதிவு…

சிறார் திருமணம் எதிரொலி: கர்ப்பத்தை கண்காணிக்க அஸ்ஸாம் மாணவிகளுக்கு மாதவிடாய் கார்டு – Menstrual card for Assamese girls to monitor pregnancy

அஸ்ஸாம் மாநிலத்தில் பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. சமீபத்தில் சிறார் திருமணத்திற்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. அஸ்ஸாமில் பிரசவத்தின் போது அதிக அளவில் இறப்பு விகிதம் இருக்கிறது என்று அரசு தரவுகளைச் சொல்லி நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் கார்டு வழங்கப்பட்டுள்ளது.…

கடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்… 5 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது டெல்லி கேபிடல்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் 5 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 130 ரன்கள் எடுத்த நிலையில் 131 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது குஜராத் டைட்டன்ஸ். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் கேப்டன்…

மூணாறில் பிடிபட்ட அரிசிக் கொம்பன் யானை; கண்ணகி கோயில் பகுதியில் விட்ட கேரள வனத்துறை!

கேரளாவின் இடுக்கி மாவட்டம், சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எட்டு உயிர்களைக் காவு வாங்கிய அரிசிக் கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஐந்து முறை ஊசி செலுத்தி மயக்கமடைந்த அரிசிக் கொம்பனின் கழுத்தில், சாட்லைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லையான தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் விடப்பட்டது. பிடிபட்ட அரிசிக் கொம்பன்முதலில் அரிசிக் கொம்பனைப் பிடித்து பாலக்காடு பரம்பிகுளம் புலிகள் காப்பகத்தில்விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேக்கடி…