Monthly Archives: April, 2023

5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம் – மு.க.ஸ்டாலின் விளக்கம்

பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். Source link

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு காயம்… பெங்களூருவுக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடுவாரா..?

சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் சி.எஸ்.கே.அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோனியின் முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து அவர் மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இதனால் அவரது முழு திறமையையும் வெளிப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.எனினும் தோனி முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவர் சிறப்பாக விளையாடி வருவதை எல்லோரும் கண்கூடாக பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார். ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு…

ஆளுநர்களுக்கு எதிராக `தேசிய அளவில்’ திட்டம் தீட்டும் மு.க.ஸ்டாலின்! – எடுபடுமா முயற்சி? | M.K.Stalin planning a national plan against the governors is the attempt will succeed?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10.04.2023 அன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை இணைத்து அனுப்பப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், “அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகள் குறித்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும்போதிலும், அவை இப்போது மதிக்கப்படுவதோ… பின்பற்றப்படவதோ இல்லை. அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால், அந்தந்த மாநிலங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் முடங்கிப்போயிருக்கின்றன.…

Doctor Vikatan: பூரான் கடித்தால் விஷமா… இதற்கு சிகிச்சை அவசியமா? | Doctor Vikatan: Centipede bites are poisonous?

Doctor Vikatan: பூரான் கடித்தால் விஷமா…. இதற்கு சிகிச்சை அவசியமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்.பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை பூரான் கடிக்கும்போது அதில் சிறிதளவு விஷத்தன்மை இருக்கவே செய்யும். ஆனால் அது மனிதர்களைக் கடிக்கும்போது பெரிய விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. பூரான் கடித்துவிட்டால், அந்த இடம் சிவந்துபோவது, எரிச்சல், வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். அரிதாகச் சிலருக்கு அந்தப் பூரானின் விஷக்கடியால் உடலளவில் (systemic manifestation) சில பாதிப்புகள் ஏற்படலாம்.…

CSK v RR: ஸ்பின்னர்களால் அணைகட்டிய சஞ்சு சாம்சன்; தோற்றாலும் `நீ சிங்கம்தான்’ எனச் சொல்ல வைத்த தோனி! | IPL 2023: Dhoni fails to take CSK home, but puts up a spirited fight

சேப்பாக்கத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக பேட் ஏந்துவதும் கொலைக்களத்தில் வேண்டி விரும்பி தலையை வைப்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். அதிலும் டர்னோடு விளையாடி ஸ்பின்னோடு உறவாடும் இரு அணிகளின் தலைசிறந்த ஸ்பின்னர்களுமே மோதலுக்கு மேலும் செறிவூட்டுபவர்கள். ஆகவே பல திருப்பங்களை சிஎஸ்கே – ராஜஸ்தான் இடையிலான போட்டி சந்திக்கும் என்பது பலருமே யூகித்த ஒன்றாகவே இருந்தது.டாஸ்கூட 200-வது முறையாக சிஎஸ்கேவிற்குத் தலைமையேற்ற தோனிக்கே வாழ்த்தி வாக்களித்தது. கிட்டத்தட்ட 60 சதவிகிதம் போட்டிகளில் அணியை வெல்ல வைத்திருக்கும் தோனியின் ஹோம் ரெக்கார்ட்…

இட்லி மாவு அரைப்பது முதல் பஜ்ஜி சுடுவது வரை.. உங்களுக்கான சூப்பர் கிட்சன் டிப்ஸ்..!

சில எளிய வீட்டு குறிப்புகளையும் சமையல் குறிப்புகளையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நன்றி

உடல் நீரிழப்பு என்பது என்ன? அது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கி விட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கூடவே, கோடைக்கால நோய்களான Heat Strokes (வெப்ப பக்கவாதம், Sun burns, Food Poisoning (உணவு நஞ்சாகுதல்) போன்றவையும் நம்மை பாதிக்கக் கூடும். இவற்றையெல்லாம் விட மிகவும் முக்கியமானதாகவும் அதேவேளையில் நாம் பெரிதாக கவனம் செலுத்தாததாகவும் டிஹைட்ரேசன் என்று அழைக்கப்படும் நீரிழப்பு உள்ளது. மயக்கம், உடல் சோர்வு தொடங்கி கிட்னி செயலிழப்பு…

Doctor Vikatan: வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கும் சன் ஸ்கிரீன் அவசியமா? | Doctor Vikatan: Is sunscreen necessary for children who play in the sun?

சன் ஸ்கிரீன் போட்டுவிடுவதால் குழந்தைக்குப் பாதுகாப்பு என நினைப்பதைவிட, அந்த வெயிலைத் தவிர்க்கச் செய்வதே சிறந்தது. குழந்தைகளுக்கென பிரத்யேக சன் ஸ்கிரீன் எல்லாம் கிடையாது. குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என எல்லோருக்கும் ஒன்றுதான். நல்ல சன் ஸ்கிரீன் என்றால் அதில் 30 முதல் 50 வரை எஸ்.பி.எஃப் (சன் புரொட்டெக்ஷன் ஃபேக்டர்) இருக்க வேண்டும். யுவிஏ மற்றும் யுவிபி கதிர்கள் தாக்காமல் பாதுகாக்கும்படியாக இருக்க வேண்டும். சன்ஸ்கிரீன்நான்காமிடோஜெனிக் (Noncomedogenic) தன்மை கொண்டதா என பார்த்து வாங்க வேண்டும். அதாவது…

CSK vs RR | ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்னில் வெற்றியை தவறவிட்டது சிஎஸ்கே | CSK lost the match by just 3 runs against Rajasthan royals in chepauk dhoni

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 36…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில், வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. 20 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.இந்த நிலையில் ஆளும் பாஜக, 23 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக உள்ள 6 பேர் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக நேற்றுமுன்தினம் 189…

1 25 26 27 28 29 51