`போர்ன்விட்டாவின் தவறான விளம்பரங்களை நீக்க வேண்டும்’ – தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்!|Bournvita gets NCPCR notice to remove advertisement
இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சரான ரேவந்த் ஹிமத்சிங்கா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானமான போர்ன்விட்டா (Bournvita) குறித்து விமர்சன வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அந்த வீடியோவில், போர்ன்விடாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த பானத்தைத் தருவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.போர்ன்விட்டாஇதற்கு மறுப்பு தெரிவித்து போர்ன்விட்டாவின் மான்டெல் இந்தியா நிறுவனம், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. “சட்டரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால்…








