மாதவிடாய் விடுப்பு: `பாலின சமத்துவம் நோக்கி பயணிக்கும் விகடன்,அரசும் நிறுவனங்களும் செயல்படுத்துமா?’ | Menstrual Leave – A Journey Towards Gender Equality
இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். `உனக்குத்தான் லீவ் குடுத்தாச்சே, நீ வீட்டில் இரு. வேலைக்கு வராதே. வசதிகளைக் கேட்காதே’ என்று சில பணியிடங்கள் பெண்ணுக்கான வசதிகளை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இந்த விடுப்பை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய ஆபத்தும் வரலாம். மாதவிடாய் ஒரு நாளில் நின்றுவிடாது. குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு இருக்கும். ஒருநாள் விடுப்பு முடிந்து, மாதவிடாய் தொடரும்போதும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும். எனவே, நாப்கினை வைத்துக்கொள்ள அலமாரி, போதுமான தண்ணீர் வசதி, நாப்கினை அகற்றும்…









