“மாத்திரைகளை எதிர்க்கும் வீரியத்துடன் கொரோனா வைரஸ் உருமாறுகிறது” அமெரிக்க ஆய்வு சொல்வதென்ன? | “Coronavirus evolves with pill-resistant virulence,” says US study
அமெரிக்காவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரித்து உலகளவில் விற்பனை செய்து வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பாக்ஸ்லோவிட் (Paxlovid) எனப்படும் கொரோனா தடுப்பு மாத்திரையை தயாரித்து நீண்ட ஆய்வுக்குப் பின்னர் வெளியிட்டது. இந்த மாத்திரை தற்போது உலகம் முழுவதும் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது.Paxlovid கொரோனா தடுப்பு மாத்திரைபெருந்தொற்றுக் காலத்தில், “ தினமும் இருமுறை, மூன்று மாத்திரைகள் வீதம் ஐந்து நாள்களுக்கு இந்தக் கொரோனா தடுப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள…