தகவல் தொழில்நுட்ப பிரிவை தொடர்ந்து பாஜ கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் அதிமுகவில் இணைந்தார்: மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி
சென்னை: பாஜ கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் பொன்.கந்தசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனால் மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார்.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உள்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் என அடுத்தடுத்த பிளவுகளை அதிமுக சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் கூட்டணி கட்சியான பாஜவின் மூத்த நிர்வாகிகள்…