கலாஷேத்ராவில் பாலியல் புகார்.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
சென்னை: சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரி குறித்து சட்டப்பேரவையில் விசிக கட்சி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய கட்சி உறுப்பினர்கள், ‘கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு நிறுவனங்களில் இது போன்று தொடர்ந்து நடந்து வருகிறது. கலாஷேத்ராவில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் தலையிட்டு மாணவிகளுக்கு நீதி…