IPL 2023 Preview: `ஒசரட்டும் பத்து தல…'- சாம்பியனாக தோனிக்கு விடைகொடுக்குமா சிஎஸ்கே?
வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி பரபரப்பாக இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தப் பயிற்சிகளின் ஒரே ஒரு செஷனில் மட்டும் ரசிகர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டது. வெறுமென பயிற்சிதான். ஆனால், அதற்கே ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள்.அங்கு கூடியிருந்த அத்தனை ரசிகர்களின் மனதிலும் ஒரே ஒரு கேள்வியும் ஏக்கமும்தான் அதிகம் குடிகொண்டிருந்தது. அது, சிஎஸ்கே மீண்டும் சாம்பியனாகுமா என்பதே!2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் பெரும் வீழ்ச்சியிலிருந்து சிஎஸ்கே மீண்டு வந்து சாம்பியனாகியிருந்தது. அதேபோன்றதொரு…