Virat Kohli: `தளராமல் சமர் புரியும் வீரன்!'- கிங் கோலியின் கம்பேக்கும் வலி மிகுந்த ஃப்ளாஷ்பேக்கும்!
அடைமழை காலங்களில் வானத்தைப் பார்த்திருக்கிறீர்களா? மேகங்கள் முட்டி மோதி வெடி வெடிக்கும். மின்னல்கள் தடதடக்கும். தீர்ந்தே போகாதோ எனத் தோன்றுமளவுக்கு மழையின் சாரல்கள் பூமியை நனைத்துக்கொண்டே இருக்கும். நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கும் அளவுக்கு எதோ ஒன்று வானில் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அதே வானத்தை கோடை காலங்களில் பாருங்கள். ஒன்றுமே இல்லாமல் ஒருவித வெறுமையோடு மட்டுமே வானம் காட்சியளிக்கும். கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலிக்கு கடந்த 1205 நாட்களும் இப்படியான வெறுமை நிறைந்த நாட்களாகவே இருந்தது.…