Daily Archives: March 14, 2023

Doctor Vikatan: வேலையில் டார்கெட், டெட்லைனால் ஸ்ட்ரெஸ்; அதனால் வரும் உடல்வலி… சிகிச்சை தேவையா? | doctor vikatan – Stress caused by targets and deadlines resulting in body aches… need treatment?

டோபமைன் எனப்படும் ஹார்மோன், ஒருவருக்கு எந்த அளவுக்குச் சுரக்கிறது என்பதைப் பொறுத்து அவர் வலியை உணரும் தன்மை மாறுபடும். ஸ்ட்ரெஸ்ஸானது இந்த டோபமைன் சுரப்பை அதிகப்படுத்தும். அதனால் வலியையும் அதிகமாகவே உணர்வோம். உடல் இறுக்கம் என்பது ஏற்கெனவே உள்ள வலியினால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது அந்த வலி அதிகரிக்காமல் இருக்க நம் உடல், தனக்குத்தானே ஒருவித பாதுகாப்பு நிலையை எடுத்துக் கொள்ளும். அதனாலும் இருக்கலாம். அதாவது கழுத்தை ரொம்பவும் குனியும்போது நரம்பு அழுத்தம் ஏற்படும் பட்சத்தில் கழுத்தை…

டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய அணி: ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி | India clinch Test series 2 1 Qualifies for ICC World Championship finals

அகமதாபாத்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி தொடரை வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. உஸ்மான் கவாஜா 180, கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்தனர்.…

வள்ளலார் கூறிய உணவு முறைகள் பற்றி தெரியுமா?

நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி சமைப்பது? எந்த உணவை எல்லாம் நாம் சாப்பிட வேண்டும்?அதை எப்படி சாப்பிட வேண்டும்? என்ற இதுபோன்ற பல விஷயங்களை அன்றே வள்ளலார் நமக்கு எடுத்துரைத்து சென்றுள்ளார். அதனை பற்றி சிலவற்றை இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம். அரிசிநாம் சமைக்கும் அரிசி சீரக சம்பா அரிசியாக இருப்பது உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த பலனை தரும். சீரக சம்பா சமைக்கும் பொழுது எந்த அளவிற்கு பிரமாதமான மணம் வீசும்…

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் : அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. Source link

நாடாளுமன்ற துளிகள்

*ஏகே 203 ரைபிள்ஸ் உற்பத்திமாநிலங்களவையில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில்,‘‘ஆயுத படைகளுக்கான ஏகே 203 ரக துப்பாக்கிகள் உத்தரப்பிரதேசத்தின் கோர்வாவில் உளள் இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் சோதனை கட்டத்தில் உள்ளது. ஏகே 203 துப்பாக்கிகளை உள்நாட்டில் உருவாக்குவது பாதுகாப்பு படைகளுக்கான தாக்குதல் துப்பாக்கிகள் பெறுவதில் தன்னிறைவுக்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.* பாதுகாப்பு துறை இலக்கு ரூ.1.75லட்சம் கோடிபாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட்…

“நுங்கு, குலோப் ஜாமூன் பற்றியெல்லாம் பேசியது ஏன்?" – டாக்டர் ஷர்மிகா விளக்கம்

“மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகப் பேசிவரும் டாக்டர் ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன், 2022 டிசம்பர் 31ம் தேதி விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.செய்தி வெளியாவதற்கு முன்பே டாக்டர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டபோது அதுகுறித்து, பேச மறுத்துவிட்டார். ஆனால், தற்போது நம்மை தொடர்புகொண்டு பேசினார் டாக்டர் ஷர்மிகா.“சித்த மருத்துவம் மக்களுக்கு போய் சேரணும்ங்குற நல்ல நோக்கத்துலதான் தொடர்ந்து…

பரபரப்பான ஆட்டத்தில் ஆர்.சி.பி.யை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் அற்புதமாக விளையாடிய டெல்லி வீராங்கனைகள் அணியை வெற்றி பெற வைத்தனர்.  முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மந்தனா 15 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சோபி டெவின் 21 ரன்னில்…

14.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 14 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசி பலன் | 14032023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் இருப்பார்: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு

பூந்தமல்லி:அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என்று அமைச்சர் சா.மு.நாசர் கூறினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவேற்காடு நகர திமுக சார்பில், நேற்று திருவேற்காடு நகராட்சி அலுலவகம் அருகே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான என்இகே.மூர்த்தி தலைமை தாங்கினார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, வி.பி.ராஜன் ஆகியோர் முன்னிலை…