ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு தான் இந்தியாவின் வளர்ச்சியா? கே.எஸ்.அழகிரி கேள்வி
ஆலந்தூர்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுதான் இந்தியாவின் வளர்ச்சியா, என்று ஒன்றிய அரசை கண்டித்து சின்னமலையில் நடந்த ஆர்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். அதானியின் பங்குச்சந்தை ஊழல்களுக்கு துணை போகும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் சின்னமலையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், அசன் மவுலானா, பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலிட…