அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி… ஆஸ்திரேலியாவுடன் மோத அதிக வாய்ப்பு…
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இவை குருப் ஏ மற்றும் பி என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.குரூப்…
