Daily Archives: February 18, 2023

பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் கால விடுப்பு; சட்டம் கொண்டு வந்து வழிகாட்டுகிறது ஸ்பெயின்! |Spain passes law for menstruation leave

அதில், `ஸ்பெயினில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் அசௌகர்யமாக உணர்ந்தால், மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம்’ என அந்த நாட்டு அரசு சட்டம் நிறைவேற்றியது. இதன் மூலம் `ஐரோப்பாவில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்புக்கான உரிமையை வழங்கும் முதல் நாடு’ என்ற பெருமையை அது பெற்றுள்ளது. மாதவிடாய்இந்தப் புதிய சட்டம் குறித்து நாட்டின் சமத்துவ அமைச்சர் ஐரீன் மான்டெரோ கூறுகையில், “பெண்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த முடிவு முக்கியமானது. இந்தச் சட்டம்…

IND v AUS: மீண்டும் காப்பாற்றிய லோயர் ஆர்டர்; சவாலாக மாறியிருக்கும் 2வது டெஸ்ட்டை இந்தியா வெல்லுமா?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நேற்று டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் ஆரம்பமானது. பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின்…

ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிய வேலையை உதறி பிரியாணி கடை நடத்தி அசத்தும் தஞ்சை பட்டதாரி இளைஞர்.. 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடி மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பிறகு அந்த வேலை பிடிக்காததால் சம்பளத்தை பெரிதும் எண்ணாமல் அந்த வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கே திரும்பி வந்துள்ளார். கார்த்திக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கார்த்தி வாழ்வாதாரத்திற்காக என்ன செய்வது என்று யோசித்தபோது இவருக்கு தெரிந்த ஒரே ஒரு விஷயம்…

செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி: செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள இடர்பாடுகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். Source link

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது..!!

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் 1,430 வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது. தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. Source link

திருமணமாகாத ஆணுக்கு கருத்தடை ஆபரேஷன்; மருத்துவர்களின் அலட்சியத்தால் கதறும் நோயாளி!| Doctor performs vasectomy instead of hydrocele surgery

இது குறித்து யாதவ் கூறுகையில், “நான் ஹைட்ரோசீல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. செயின்பூர் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தவறான அறுவை சிகிச்சையை எனக்குச் செய்துள்ளனர். சில வாரங்களில் எனக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இப்போது என்னால் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும். என்னுடைய வாழ்வையே நாசம் செய்து விட்டார்கள். இது குறித்து உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.இருந்த போதும் மருத்துவர்கள், `நோயாளியின்…

விளையாட்டுத் துளிகள் | தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி | Sulakshan Kulkarni appointed Tamil Nadu coach

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி: 2023-24 மற்றும் 2024-25-ம் ஆண்டு சீசனுக்கான தமிழக கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சுலக் ஷன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சுலக் ஷன் குல்கர்னி மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி உள்ளார். அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 65 ஆட்டங்களில் 3,332 ரன்களை சேர்த்துள்ளார் சுலக் ஷன் குல்கர்னி. இளையோர் தடகள போட்டி:தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் 4-வது…

என் அழகானவன்! – இல்லத்தரசி ஷேரிங்ஸ் | My Vikatan | My Vikatan article about onion

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்என் அழகானவன்;என்னோடு பழகியவன்;வாட்டம் போக்குபவன்;பளபளப்பானவன்;இளஞ்சிவப்பு நிறத்தழகன்;என் உடலுக்கு கேடயமானவன்;கொழுப்பைக் குறைக்க உதவுபவன்நான் அழுதால் தானழுதுநான் சிரித்தால் தான் சிரித்துஎனக்கு எனக்கானஒரே உயிரானவன்.என் ஜீவனை புதுப்பிக்கிற சக்தி அவனுக்கு மட்டுமே உண்டு.என் கொஞ்ச லுக்காக காத்திருப்பவன்.தினமும் என்னுடைய காலை /மாலை பொழுதுகளை அழகாக்குபவன்.மனிதத் தனத்தை மறந்து…

புற்றுநோய் பாதிப்பு; அதுவரை அறியாத வெளிநாட்டு மொழி உச்சரிப்பில் பேசிய நோயாளி!

மோசமான நோயால் ஒருவர் பாதிக்கப்படுகையில், அவர் உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைந்து, வெறுப்பு, எரிச்சல், கோபம் என பல்வேறு குணங்களை வெளிப்படுத்துவதுண்டு. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயது நபர் ஒருவர் தனக்குச் சற்றும் பரிச்சயமில்லாத வேறொரு மொழியைப் பேசியுள்ளார்.புராஸ்டேட் புற்றுநோய் !அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் வசித்து வரும் 50 வயது நபர், புராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கேன்சரால் பாதிக்கப்பட்ட இவர், அயர்லாந்து மொழியைச் சரளமாகப் பேசியிருக்கிறார்.இவரது குடும்பம் அயர்லாந்தில் இல்லை. அந்த மொழி குறித்து…

ஈரோடு: நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஈரோடு: இன்று காலையில் நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு 44வது வார்டு காந்திஜி சாலை ஓடைப்பள்ள பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்தனர். அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் அருந்ததியர் சமூக மக்கள் தடுத்து நிறுத்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். சீமான் எப்படி எங்களை வந்தேறிகள் என்று சொல்லலாம் எங்களை வந்தேறிகள் என குறிப்பிட்டுவிட்டு எங்களிடம் எதற்காக ஒட்டு கேட்டு வருகிறீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்தனர். சீமான் கூறிய கருத்தை திரும்ப பெறுவதுடன் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறினர்.…

1 2 3