இலங்கை ‘மாவீரர் நாள்’ நிகழ்வில் கூடிய பல்லாயிரம் பேர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இலங்கை உள்நாட்டுப் போரில் பங்கேற்று உயிர் நீத்த தமிழர்களை நினைவுகூர்ந்தனர்.விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ்ப் போராளிக் குழுக்கள் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனியாகப் பிரித்து தமிழ் ஈழம் என்ற தனி நாடாக்கவேண்டும் என்று போராடினர்.பல கட்டங்களை கடந்த இந்தப் போராட்டம், இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே களத்தில் இருக்கும் நிலையை எட்டியது.…









