“கரண் ஜோகரை மிரட்டி ரூ.5 கோடி பறிக்க திட்டமிட்டோம்!” – சித்து கொலையில் கைதானவர் பகீர் வாக்குமூலம் | person arrested in the murder of a Punjabi singer has said that he planned to extort money from Karan Johar.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக புனே போலீஸார் சிதேஷ் காம்ப்ளே என்று அழைக்கப்படும் மஹாகாலை கைதுசெய்துள்ளனர். அதோடு குஜராத்தில் சந்தோஷ் காம்ப்ளே, நாக்நாத் சூர்யவன்சி ஆகியோரையும் இந்தக் கொலை தொடர்பாக கைதுசெய்துள்ளனர். மஹாகாலிடம் டெல்லி சிறப்புப் படை போலீஸ், பஞ்சாப் போலீஸ் மற்றும் மும்பை போலீஸார் சித்து மூஸ்வாலா படுகொலை மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தொடர்பாக விசாரணை…









