சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி ஆலோசனை: பாஜ எம்எல்ஏக்களும் பங்கேற்றதால் பரபரப்பு
சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பாஜ எம்எல்ஏக்களும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவருக்கு அதிமுகவில் எடப்பாடி அணியினர், ஓபிஎஸ் அணியினரும் தனித்தனியாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற உள்ளது.இந்த சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் 17ம்…








