பிரதமரின் புகைப்படம், தேசிய கொடியை நீக்கக் கோரி மனு! – News18 Tamil
பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் நம்பிக்கை பத்திரம் மற்றும் அதன் இணையதள பக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்,புகைப்படம் , தேசியக் கொடி ஆகியவற்றை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு முன்வருபவர்கள் நிதி உதவி அளிப்பதற்காக பி.எம்.கேர்ஸ் நிதி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. நன்கொடை அளிக்கப்படும் தொகைக்கு, 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.…









