மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்காவிட்டால் என்எல்சி நிறுவனத்திற்கு பூட்டு போடுவோம்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நெய்வேலி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடு நிலங்களை கொடுத்தனர். ஆனால் இதுநாள் வரையில் அவர்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும் வழங்காமல் என்எல்சி நிறுவனம் துரோகம் செய்துள்ளது. குறிப்பாக என்எல்சி சமீபத்தில் நடத்திய 293 பொறியாளர்கள் தேர்வில் ஒருவர்…









