IND v PAK: உதிரிகள், கேட்ச் டிராப், பௌலிங் ஸ்பெல் குளறுபடிகள் – எங்கெல்லாம் இந்தியா தவறவிட்டது? | India vs Pakistan: The men in green clinched a five-wicket victory against India in the Super Four match
தொடக்கத்தில் புவனேஷ்வருக்கு லைன் மற்றும் லெந்த் செட் ஆகவில்லை. பாண்டியாவின் ஓவர்களும் பந்தாடப்பட்டன. ஆஃப் கட்டர்கள், ஷார்ட் பால்கள், யார்க்கர்கள் என எப்போதும் ஏதோ ஒன்றை ஆயுதமாக இந்தியா கையிலெடுக்கும். ஆனால், இந்தப் போட்டியில் திட்டமே இல்லாதது போல் ஸ்பின் பௌலிங்கை மட்டுமே நம்பிச் சரணடைந்திருந்தது. ஆசிஃப் மற்றும் குஷ்தீல் இருவரும் யார்க்கர்களுக்குத் திணறக் கூடியவர்கள். ஆனாலும், புவனேஷ்வர் அவர்களுக்கும் அவர்களது பலங்களான ஸ்லோ பால்களையும், ஷார்ட் பால்களையும்தான் வீசினார். புவனேஷ்வர் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் காஸ்ட்லி…









