Yearly Archives: 2022

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமளவுக்கு காய்ச்சல் பாதிப்பில்லை – மா.சுப்ரமணியன்| There is no need to give holidays to schools – M. Subramanian

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு இன்ஃப்ளுயென்ஸா மற்றும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாகப் பரவவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். சமீப நாள்களில் டெங்கு மற்றும் இன்ஃப்ளுயென்ஸா காய்ச்சல் பரவி வருகிற நிலையில் புதுச்சேரி மாநில அரசு, 5 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் அதற்கான அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்… அமைச்சர் மா.சுப்ரமணியன்”தமிழ்நாட்டில்…

நாங்கள் வீரர்கள், ரோபோக்கள் இல்லை – சமூக வலைதள விமர்சனங்களுக்கு வினேஷ் போகத் பதிலடி | We Are Humans, Not Robots – Vinesh Phogat Lashes Out At Critics

புதுடெல்லி: செர்பியாவின் பெல்கிரேடு நகரில்நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் 2-வது முறையாக பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் வினேஷ் போகத். அவர், கடந்த 2019-ம் ஆண்டும் பதக்கம் வென்றிருந்தார். இந்தத் தொடரில் வினேஷ் போகத் தகுதி சுற்றில் 0-7 என்றகணக்கில் மங்கோலிய வீராங்கனையிடம் தோல்வி கண்டிருந்தார். இதனால் சமூக…

வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க…

இன்றைக்கு 50 வயதைக் கடந்தாலே எண்ணற்ற உடல் நலப்பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. மாறிவரும் கலாச்சாரம் மற்றும் உணவு முறைகள் தான் இதுப்போன்ற நிலைக்கு காரணம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். நன்றி

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.4,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.61.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Source link

மாவட்டச் செயலாளர் தேர்தலுடன் மாவட்ட அமைப்புகளுக்கு தேர்தல்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மாவட்ட அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது குறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக 15வது பொதுத் தேர்தலில், பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகரத் தேர்தல்கள் முடிவுற்றதை தொடர்ந்து, நடைபெற உள்ள மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில், மாவட்டக் கழக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, மாவட்டக் கழகத்திற்கென ஒரு அவைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், துணைச் செயலாளர்­கள் மூன்று பேர்(கட்டாயமாக ஒருவர் பொதுப்பிரிவினராகவும், ஒருவர் ஆதிராவிடர் அல்லது மலைவாழ்…

ஹீரோ ஒர்ஷிப் செய்யாதீர்கள் கௌதம் கம்பீர் காட்டம்

ஒளிபரப்பாளர்களாக இருக்கட்டும் மீடியாக்களாக இருக்கட்டும் ரசிகர்களாகவே இருக்கட்டும் இந்திய கிரிக்கெட்டே ஏதோ கோலி, தோனி, கபில் தேவ் என்று அவர்களையே, பிராண்டாக்கி கொண்டாடுகிறது. யாராக இருந்தாலும் அவரை ஹீரோ ஒர்ஷிப் செய்யக் கூடாது. மற்ற வீரர்களையும் கொண்டாட வேண்டும் என்று கவுதம் கம்பீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.“ஓய்வறையில் நாம் ஹீரோக்கள் எனும் பூதங்களை உருவாக்க வேண்டாம், இந்திய கிரிக்கெட் தான் அங்கு பூதமாக இருக்க வேண்டும். தனிநபர் ஹீரோ பூதங்களை உருவாக்காதீர்” என்கிறார் கவுதம் கம்பீர். மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ்…

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்… வைரலான வீடியோ; டாக்டர் மீது எஃப்.ஐ.ஆர்!

விலங்குகளின் மீதான கொடூரமான தாக்குதல்கள் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் நாய் ஒன்றை காரில் கட்டி, காரை வேகமாக ஓட்டி நாயை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் கண்டனங்களையும் பெற்று வருகிறது. ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த கொடுமையான செயலில் ஈடுபட்டுள்ளார். சாலையில் இன்னும் பல வாகனங்கள் சென்று கொண்டிருக்க, நாயை காரில் கட்டி வேகமாகச் சாலையில் ஓட்டி சென்றுள்ளார். காரின் வேகத்திற்குப் பிடிகொடுக்க முடியாமல், நாய்…

நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க பள்ளிகளுக்கு விடுமுறை ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காய்ச்சலால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையில், நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 3 நாளில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று சுகாதாரத் துறை ஆறுதல் கூறுவது போதுமானதல்ல. காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள்…

Doctor Vikatan: ஃப்ளு தடுப்பூசி அவசியமா? கொரோனாவா, ஃப்ளுவா என எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது? | doctor vikatan – How to find difference between Corona and Flu

Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பாக இருக்கிறது. ஃப்ளூ காய்ச்சல் என்கிறார்களே…. அதுதானா? ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்வது இந்நிலையில் அவசியமா? எந்த வயதில் போட்டுக்கொள்ள வேண்டும்? இது ஃப்ளூதானா அல்லது கொரோனாவா என வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி. பூங்குழலிஇன்ஃப்ளுயென்ஸா என்பதன் சுருக்கமே ஃப்ளு. இது ஒருவகையான வைரஸ் தொற்று. சளி, காய்ச்சல் பாதிப்பு என பேச்சுவழக்கில் சொல்வது இந்த ஃப்ளுவை தான்…

"வீட்டிலிருந்து விமர்சனம் செய்வது எளிது, களத்தில் விளையாடுவது கடினம்!"- வினேஷ் போகத் காட்டம்

இந்தியாவின் பிரபலமான மல்யுத்த குடும்பமான மகாவீர் போகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர் வினேஷ் போகத். இவர் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான கீதா மற்றும் பபிதாவின் சித்தப்பாவின் மகள். இதனாலேயே வினேஷ் போகத் மீது எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகமாக இருக்கும்.இந்நிலையில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 3 முறை காமன்வெல்த்தில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சமீபத்தில் செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இதன் முதல் சுற்றில் மகளிருக்கான…

1 206 207 208 209 210 510