“மத்திய அரசு சொல்லியும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்கவில்லை!” – செந்தில் பாலாஜி | Minister Senthil Balaji attended National Electricity Sector Conference at rajasthan
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.அந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-ஐ திரும்பப் பெற வேண்டும் என வலியுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதேபோல, கடந்த…









