FIFA WC 2022 | அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை – மாயாஜாலம் நிகழ்த்தப்போவது மெஸ்ஸியா, மோட்ரிச்சா? | Croatia aim to end Lionel Messis FIFA World Cup dream
தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதியில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி அங்கம் வகிக்கும் அர்ஜெண்டினா அணி, லூக்கா மோட்ரிச்சின் குரோஷியாவை எதிர்த்து விளையாடுகிறது. 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 2-வது இடம் பிடித்த குரோஷியா இம்முறை கத்தாரில் கோப்பையை வெல்லக்கூடிய பிரதான அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட பிரேசில் அணியை கால் இறுதி சுற்றில் அதிர்ச்சி…









