“நடுவர் டேனியல் ஒர்சாடோ மிகவும் மோசமானவர்!”- குரோஷிய வீரர் லூகா மாட்ரிச் குற்றச்சாட்டு | Luka Modric Slams Referee After World Cup Semi-Final Loss To Argentina
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றில் குரேஷியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே அர்ஜெண்டினாவின் முதல் கோலுக்குக் காரணம் இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோ வழங்கிய தவறான பெனால்டி தீர்ப்புதான் என்று கூறி வரும் நிலையில், குரோஷிய அணியின் கேப்டன் லூகா மாட்ரிச் அந்த நடுவர் குறித்து விமர்சித்துப் பேசியிருக்கிறார்.இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோ குறித்துப் பேசிய லூகா மாட்ரிச், “என்னைப் பொறுத்தவரை இது பெனால்டியே கிடையாது. பொதுவாக நடுவர்களைப் பற்றி நான் பேச…









