அமைச்சராக உதயநிதி எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்னென்ன?! – ஒரு பார்வை
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றுக்கொண்டது. இந்தநிலையில், 19 மாதங்கள் கழித்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உதயநிதிக்கு என்ன மாதிரியான துறை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்” ஒதுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை:முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இளைஞர் நலன்…