2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு தலைவலியாக மாறிய 350 எம்பி தொகுதிகள்: காங்கிரசை காட்டிலும் மாநில கட்சிகளின் பலம் அதிகமானதால் தவிப்பு
புதுடெல்லி: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தலைவலி கொடுக்கும் வகையில் 350 எம்பி தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் காங்கிரசை காட்டிலும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் உள்ள தொகுதிகள் என்பதால் அவை பாஜக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.நாடு முழுவதும் அடுத்தாண்டு ஒன்பது மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநில தேர்தல் முடிவுகள் 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.…








