Daily Archives: December 31, 2022

‘உலகக்கோப்பை வருகிறது… ஓய்வு நாட்களை எதிர்பார்க்காதீர்கள்…’ – விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு கவுதம் காம்பீர் அட்வைஸ்…

உலகக்கோப்பை வரவுள்ளதால் ஓய்வு நாட்களை எதிர்பார்க்காதீர்கள், என்று விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அட்வைஸ் செய்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இதையொட்டி தொடர்ச்சியான ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. வங்கதேச சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டுள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான தொடரை உள்ளூரில் விளையாடவுள்ளது. இதன்பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும்…

சர்க்கரை நோயாளிகளுக்கு செம்ம ட்ரீட்.. டேஸ்டியான நாவல்பழ சாலட் ரெசிபி

சர்க்கரை நோய் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது உணவுக் கட்டுபாடுதான். இதுநாள் வரை கணக்கிடாமல் பசித்த போது சாப்பிட்டு வந்த நபர்கள் தாங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்ததும் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளையே சற்று மாற்றி, அளவாக சரியான நேரத்தில் உண்ணத் தொடங்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் நீரிழிவு நோய்க்கு கட்டாயம் சில பிடித்தமான உணவுகளை தவிர்த்து தான் ஆகவேண்டும். அதற்காக உப்பு சப்பில்லாத சாப்பாட்டை சாப்பிட வேண்டுமென அவசியம் இல்லை. அன்றாடம் சாப்பிடுவதே சலிக்காமல்…

காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு வாழ்த்து

சென்னை: காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். காவல் அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூற தலைமை அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வாழ்த்துகளை தொலைபேசியில் தெரிவித்தால் போதுமானது எனவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். Source link

ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கும் 35 எம்எல்ஏக்களுக்கு‘ஒய் பிளஸ்’ தேவையா?: தேசியவாத காங். மூத்த தலைவர் காட்டம்

மும்பை: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கும் 35 எம்எல்ஏக்களுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு தேவையா? என்று தேசியவாத காங். மூத்த தலைவர் அஜித் பவார் கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிரா அரசின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேசியவாத மூத்த தலைவருமான அஜித் பவார் பேசுகையில், ‘சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் இணைந்துள்ள 30 முதல் 35 எம்எல்ஏக்களுக்கு…

“ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!”- இந்திய மருத்துவ இணை இயக்குநர் பார்த்திபன் எச்சரிக்கை | Indian Medicine and Homeopathy Joint Director Parthiban interview about Sharmika Saran controversy

அதேபோல், ஷர்மிகா சொல்வதுபோல ஒரே குலோப் ஜாமில் மூன்று கிலோ எடை ஒரேநாளில் கூடுவது என்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒருநாளில் மூன்று வேளைக்குப் பதில் ஆறு வேளை எனச் சாப்பாடு சாப்பிட்டால்கூட மூன்று கிலோ எடை கூடாது. மேலும், குப்புறப்படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும் என்கிறார். இதற்கு, மருத்துவ ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட தகவல்களை மட்டும்தான் ஏற்றுக்கொள்ளமுடியும். தானே, கருத்துகளை மக்களிடம் திணிக்கக்கூடாது. ஒரு மருத்துவர் மருத்துவரீதியான கருத்துகளை மட்டும்தான் சொல்லவேண்டும்.…

Cristiano Ronaldo: சவுதி அரேபியா கிளப் ஒன்றில் இணைந்த ரொனால்டோ – ஒரு வருடச் சம்பளம் இத்தனை கோடிகளா? | Ronaldo signs deal with Saudi club, becomes highest-paid footballer ever

இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாட இரண்டரை வருடங்களுக்குப் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வருடத்துக்கு 177 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 1770 கோடி) சம்பளத்துக்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.கிறிஸ்டியானோ ரொனால்டோஇதுதொடர்பாக அல் நஸர் கிளப் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. அப்பதிவில், “இந்த ஒப்பந்தம் எங்கள் கிளப் மட்டுமின்றி, எங்கள் நாடு மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கே சாதனைக்கான உந்து சக்தியைத்…

ரிஷப் பண்ட் விபத்து தொடர்பான வைரல் வீடியோ – எதிர்ப்பு தெரிவிக்கும் ரோஹித் சர்மா மனைவி ரித்திகா! | Rohit Sharma’s wife Ritika Sajdeh lashes out at sharing Rishabh Pant’s viral clips

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் நேற்று டெல்லியிலிருந்து உத்தரகாண்ட்  சென்றுகொண்டிருந்தபோது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்பாக பிசிசிஐ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.அந்த அறிக்கையில், “ரிஷப் பண்டிற்கு நெற்றியில் இரண்டு வெட்டுகள், வலது முழங்கால், வலது மணிக்கட்டில் தசைநார் கிழிவு, கணுக்கால் மற்றும் முதுகில் சில சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளன. அவருக்குத்…

கெலாட்டின் 92 ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி விலகல் கடித விவகாரம்; ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு புதிய ஆபத்து?: சபாநாயகருக்கு பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நெருக்கடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் 92 ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகல் கடிதம் கொடுத்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராததால், அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு புதிய ஆபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற போது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. ஒருவேளை அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், அவர்…

கோவிட்: பீதியில் தொடங்கி பிஎஃப்7-ல் நிறைவடைந்த 2022! I Covid rewind 2022

உலகம் உருண்டை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ். கோவிட் பாதிப்பை பொறுத்தவரையில் தொடங்கிய இடத்துக்கே அது மீண்டும் வந்துள்ளது.2020-ம் ஆண்டு உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் மெள்ள கொண்டு வரத் தொடங்கியது கொரோனா வைரஸ். 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் ஏற்பட்ட அலைகள் உலக அளவில் கோடிக்கணக்கானவர்களை பாதித்ததோடு, லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. தடுப்பூசிகளின் வரவாலும், ஏற்கெனவே நோய் பாதித்ததால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியாலும், வைரஸின் வீரியம்…

விடைபெற்றார் கால்பந்தின் அரசன் பீலே | Farewell to the king of football, Pele

சாவோ பாவ்லோ: மூன்று முறை உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்த பிரேசில் கால்பந்து அரசனும், கடந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்த ஜாம்பவான் பீலே நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 82. கால்பந்து விளையாட்டை கலையாக மாற்றி வெகுஜன ரசிகர்களை மயங்க வைத்த பீலே, கடந்த 2021-ம் ஆண்டு முதல் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு மாதமாக பல்வேறு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…