செருப்புவீச்சு, கடத்தல் குற்றச்சாட்டு! – கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் களேபரம் | clash between admk and dmk cadres arose in Karur local body election
இதற்கிடையில், அ.தி.மு.க., தி.மு.க என இரு கட்சிகளும் சமமாக இருந்ததால், பிரச்னை வெடிக்கலாம் எனத் தேர்தல் நடைபெற்ற கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். வேடசந்தூர் அருகேயுள்ள தாடிக்கொம்பு பகுதியில், அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிக என்பவர், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வாகனத்தில் தேர்தலில் வாக்களிக்க வந்துகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அவர்களை வழிமறித்த மர்மநபர்கள், கார் கண்ணாடியை உடைத்து, திருவிக-வைக் கடத்தியதாக, எம்.விஜயபாஸ்கர் தரப்பு குற்றம்சாட்டியது. இது சம்பந்தமாக, வேடச்சந்தூர் டி.எஸ்.பி சம்பவ…









