ஈரோடு: அரசுக் காப்பகத்திலிருந்து மாயமான 6 சிறுமிகள்; தேடிக் கண்டுபிடித்த போலீஸ்! – தொடரும் விசாரணை | police rescued girls who ran away from the government home in erode
ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூரில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு, பெருந்துறை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட சில மருத்துவமனைகளால் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமியும் இதில் பராமரிக்கப்பட்டு வந்தார்.இந்தக் காப்பகத்தில் நேற்று மதியம் கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமி…









