Daily Archives: November 24, 2022

இரண்டு அணியிலும் மாறி மாறி இணைகின்றனர் நேற்று ஓபிஎஸ்… இன்று இபிஎஸ்…நாளை…? குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்

சென்னை: இபிஎஸ் அணியில் இணைந்தவர்கள் மீண்டும் ஓபிஎஸ் அணியில் இணைவதும், ஓபிஎஸ் அணியில் இணைந்தவர்கள் மீண்டும் இபிஎஸ் அணியில் இணைந்து வருவதால் அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு அணிகளிலும் தினந்தோறும் ஆதரவாளர்களை இழுக்கும் படலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நட்சத்திர ஓட்டலில்,…

மெனோபாஸ் எனும் பருவம்!

நன்றி குங்குமம் டாக்டர் நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன … Source link

FIFA WORLD CUP 2022: `ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் ஆசிய அணிகள்'; வலுவான ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மற்றுமொரு அப்செட் நேற்று நிகழ்ந்திருக்கிறது. ஜப்பானுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான போட்டியில் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வென்றிருக்கிறது.குரூப் ஈ பிரிவை சேர்ந்த ஜெர்மனியும் ஜப்பானும் நேற்றிரவு கலீபா சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. நான்கு முறை உலகக்கோப்பை சாம்பியன் மற்றும் உலக அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஜெர்மனியின் முதல் போட்டி என்பதால், கால்பந்து ரசிகர்கள் அனைவரும் இந்தப் போட்டியினை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். போட்டி ஆரம்பித்தில்…

`உலகின் மூத்த குழந்தைகள்’: 30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டையில் இருந்து பிறந்த இரட்டையர்கள்! | World’s ‘oldest’ babies born from embryos frozen 30 years ago

அமெரிக்காவில், 30 ஆண்டுகளுக்கு முன்பு, 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளில் இருந்து இரட்டைக் குழந்தைகளை, ஒரு தம்பதி பெற்றெடுத்துள்ளனர். லிடியா மற்றும் தீமோத்தி ரிட்ஜ்வே என்ற இந்த இரட்டையர்கள், கடந்த அக்டோபர் 31-ம் தேதி ரேச்சல் ரிட்ஜ்வே மற்றும் அவரின் கணவர் பிலிஃப் ரிட்ஜ்வே தம்பதிக்குப் பிறந்தனர். இதுகுறித்து, தேசிய கருமுட்டைதான மையத்தினர் கூறுகையில், “லிடியா மற்றும் தீமோத்தி ரிட்ஜ்வே என்று பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைகள்தான் உலகத்தின் நீண்டநாள்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருமுட்டைகளிலிருந்து பிறந்தவர்கள். இவர்களில்…

காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்: ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவு

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத் தலைவரை மாற்ற வேண்டுமென ரூபி மனோகரன் ஆதரவு நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அது மோதலாக வெடித்ததைத் தொடர்ந்து 3 பேர் காயமடைந்தனர். இதற்கு ரூபி மனோகரன்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டு, அவர் விளக்கம் அளிக்க…

பொடுகுத் தொல்லை தீர…

நன்றி குங்குமம் டாக்டர் தலையில் வேர்வை படிவதால் ஒருவகை ஃபங்கஸ் உருவாகி பொடுகு ஏற்படுகிறது. மேலும், அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால்கூட பொடுகு ஏற்படலாம். மன இறுக்கம், … Source link

FIFA WC 2022 | சாம்பியன்களுக்கு ஏற்பட்ட சோகத்துக்கு முடிவு… | FIFA WC 2022 | An end to the tragedy of the champions…

தோகா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு அல் ஜனூப் மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலேயே ஆஸ்திரேலிய அணி கோல் அடித்து…

காலையில் வெதுவெதுப்பான தண்ணீருடன் 2 பூண்டு பற்கள் போதும்..! நன்மைகள் ஏராளம்..

பூண்டை வெதுவெதுப்பான நீரோடு குடிக்கும் பொழுது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும் அது உடலில் உள்ள வீக்கம், நச்சுகள் மற்றும் முகப்பரு பிரச்சினைகளை குறைக்கிறது.குளிர் மற்றும் காய்ச்சலுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும். நன்றி

மலேசியாவின் புதிய பிரதமராகிறார் அன்வார் – BBC News தமிழ்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesமலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று வெளியிட்டது.இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்வார் நன்றி தெரிவித்துள்ளார். இன்று மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும். அரண்மனையின் இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில நாள்களாக மலேசியாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இம்முறை சுமார் 70…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதில் உள்ள குழப்பம் போக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் மின் சந்தாதாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆதார் இணைப்புக்கான இணையவழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர்…