காங்கிரஸ் தலைவர் தேர்தல் முக்கிய நிர்வாகிகளுக்கு வாக்களிக்க கட்டுப்பாடு: பொறுப்பாளர் மிஸ்திரி உத்தரவு
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் அனைத்து பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலோ அல்லது இங்குள்ள கட்சித் தலைமையகத்திலோ வாக்களிக்க வேண்டும் என கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரசின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவும், ஜி-23 தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பி.யுமான சசி தரூரும் இதில்…








