Monthly Archives: October, 2022

T20 WC | ஷாஹீன் அஃப்ரீடியை எப்படி சமாளிப்பது? – இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் டிப்ஸ் | Sachin Tendulkar Answers on How To Tackle Shaheen Afridi

முந்தைய டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் வரிசையை சரித்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி முழு உடல்தகுதி பெற்று டி20 உலகக்கோப்பைக்காக பாகிஸ்தான் அணியுடன் இணைந்துள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பையில் ஷாஹின் அஃப்ரீடி இந்திய டாப் ஆர்டருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அதுவும் ரோகித் சர்மாவை வந்தவுடனேயே ஒரு கர்வ் யார்க்கர் லெந்த் பந்தில் எல்.பி. ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார். கே.எல்.ராகுலுக்கு ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,582,067 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,582,067 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 632,672,676 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 611,427,273 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,597 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

வெள்ள நீர் வடிகால்கள் இணைப்பு பணிகளை உடனே முடிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் பணிகள் நிறைவடையவில்லை. மழைநீர் வடிகால் பணிகளில் 95 சதவீதம் முடிந்து விட்டதாக மேயரும், 70 சதவீதம் நிறைந்து விட்டதாக மாநகராட்சியும் கூறினாலும் கூட, பெரும்பான்மையான இடங்களில் துண்டு துண்டாக அமைக்கப்பட்ட கால்வாய்கள் இன்னும் இணைக்கப்படவில்லை. இன்னும் பல இடங்களில் மழைநீர் வடிகால்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டாலும், பக்கவாட்டு சுவர்களும், மேல்தளமும் இன்னும் அமைக்கப்படவில்லை. அத்தகைய இடங்களில் தான் மழைநீர்…

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் அதிர்ச்சி…

நாளை மெல்ர்போனில் நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. நன்றி

மிளகு முதல் இஞ்சி வரை… நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த கிட்சனில் இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

இஞ்சி: இஞ்சியில் வைட்டமின்கள் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம்,பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதில் உள்ள ஹைப்போலிபிடெமிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நீரழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்திருக்க உதவுகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் காலையில் எழுந்தவுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவையும் குறைக்க முடியும். நன்றி

வனத்துக்குள் குதிரை சவாரி செய்தால் வழக்கு பதியப்படும்… எச்சரிக்கும் வனத்துறை! | illegal horse riding in Ooty forest area

காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நடைபெறும் குதிரை சவாரி குறித்து நம்மிடம் பேசிய கூடுகள் அறைக்கட்டளையின் நிறுவனர் ஊட்டி சிவதாஸ், ” ஊட்டி நகரின் அருகில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தாலும் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டுமாடு, கடமான் போன்ற பல்வேறு வகையான வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனத்திற்குள் குதிரை சவாரி மேற்கொள்வதால் குதிரைகளின் எச்சங்கள் மூலம் வனவிலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் இருக்கிறது. மேலும் வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே…

சொல்லிட்டாங்க…

* நாட்டின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் தேச விரோத நடவடிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. – ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா* மூன்று ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகே டெல்லி அரசிடமிருந்து லோக் ஆயுக்தா அறிக்கைகள் கிடைத்துள்ளது. – டெல்லி ஆளுநர் சக்சேனா.* அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் ஒன்றிய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. – மத்திய இணையமைச்சர் எல். முருகன்* கர்நாடக காவல் துறையில் ஆட்சேர்ப்பு ஊழல் இல்லாமல் நடைபெற வேண்டும். – கர்நாடக…

சுருண்டு போன ஆஸ்திரேலியா; 11 வருட வெற்றி ஏக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த நியூசிலாந்து! – T20 WorldCup : Newzealand beats Australia in their home ground

டி20 உலகக்கோப்பையின் “சூப்பர் 12” சுற்று தொடங்கியிருக்கிறது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.ஃபின் ஆலன் – டெவான் கான்வே இணை நியுசிலாந்து இன்னிங்ஸை தொடங்கினர். அதிரடிக்கு பெயர்பெற்ற டி20 பார்மட்டின் உலகக்கோப்பையை அதன் பாணியிலேயே ஆரம்பித்து வைத்தார் ஆலன். அனுபவசாலியான கப்தில் இடத்தில் ஆடிய ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்சன் சிறிது நேரம் களத்தில் இருந்து 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். கான்வே…

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஐசிசியின் டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கும் நிலையில், இத்தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் மெல்போர்ன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இது, இந்தத் தொடரில் இரு அணிகளுக்கும் முதல்போட்டி. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்பே வெறும் 10 நிமிடங்களில் இணையத்தில் விற்றுத் தீர்ந்தன. இந்த மைதானத்தில் 90,000 பார்வையாளர்கள் அமர முடியும். இவ்வளவு வேகத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது மைதானத்தில் பணியாற்றும்…

சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வட்ட செயலாளர்கள் பட்டியல்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வட்ட செயலாளர்கள் பட்டியலை பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு வட்ட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்ட நிர்வாகிகள் மாவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் மாவட்டம் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். அதாவது பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், மாதவரம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், துறைமுகம், அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை,…

1 16 17 18 19 20 63