தைராய்டு புற்றுநோய்… தடுக்க… தவிர்க்க! | Thyroid Cancer… Prevent… Avoid!
நன்றி குங்குமம் டாக்டர் சாதாரண தொண்டை வலி என்று சென்றவருக்கு, கழுத்து வீக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, சில பரிசோதனைகளை செய்து வரும்படி அனுப்பினார் மருத்துவர். பரிசோதனை முடிவுகள் அவர் சந்தேகத்தை உறுதி செய்தது. ஆம், அவருக்கு வந்திருப்பது தைராய்டு புற்றுநோய். தைராய்டு சுரப்பியில் கூட புற்றுநோய் வருமா என்று வியந்தது அந்த பெண்ணின் குடும்பம். `உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் நான்கு சதவிகிதம் பேர் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு உடையவர்கள்’ என்கிறது அமெரிக்க புற்றுநோய் ஆய்வு…








