ராகுல்காந்தி நாளை மறுநாள் மீண்டும் தமிழகம் வருகிறார்: கூடலூரில் இரண்டு நாள் பாதயாத்திரை மேற்கொள்கிறார்
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார். தனது நடை பயணத்தை கடந்த 7ம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். அவர் அங்கிருந்து, நேராக கேரளாவுக்கு சென்றார். அங்கு 11ம் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி.மீ தூரத்தை கடந்து உள்ளது. இன்று அவர் மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு…









