Dravidian model govt is going well in Tamil Nadu so that everyone can get everything CM Stalin
தமிழகத்தில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, நான் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நேரத்தில், இந்த அரங்கத்திற்கு வெளியிலே அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஸ்டார்ட் அப் அரங்குகளில் நம்முடைய இளைய சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் புதிய முன்னெடுப்போடு அமைத்திருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்த்து நான் பிரமித்துப்போய்…









