இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்த அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் காலமானார்
சின்னாளபட்டி: இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்த அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் காலமானார். சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டியில் 1934, அக்.15ம் தேதி பிறந்தவர் மாயத்தேவர். அதிமுக முதல் எம்பியான இவர், நேற்று மதியம் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில், தனது 88வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். எம்ஏ, பிஎல் பட்டம் பெற்ற இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக…









