Daily Archives: August 23, 2022

EPL: தடுமாறிய மான்செஸ்டர் யுனைடட்டிமே தோல்வியுற்ற லிவர்பூல்; இனி சாம்பியன்ஷிப்புக்கு சண்டை செய்யுமா? | English Premier League: Match highlights of Liverpool vs Manchester United

இரண்டாவது பாதியில் லிவர்பூல் அதிரடியான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது பாதி தொடங்கிய எட்டே நிமிடங்களில் இரண்டாவது கோலை அடித்தது மான்செஸ்டர் யுனைடட். கோலடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் ஒட்டுமொத்த லிவர்பூல் அணியும் அட்டாக் செய்தது. அனைவரும் யுனைடட் பாதியிலிருந்த நேரத்தில், பந்தை மீட்டு கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்கியது யுனைடட். லிவர்பூல் கேப்டன் ஜோர்டன் ஹெண்டர்சன் ஒரு பாஸைத் தவறாகச் செய்ய, பந்தைப் பெற்ற ஆன்டனி மார்ஷியல், ரேஷ்ஃபோர்டை ரிலீஸ் செய்தார். புயல் வேகத்தில்…

உடல் வெப்பத்தை தணிக்கும்… ரத்த விருத்திக்கு உதவும் பசலை|மூலிகை ரகசியம் – 18

மூலிகையை வைத்து இயற்கையாக `லிப்ஸ்டிக்’ (உதட்டுச் சாயம்) தயாரிக்க முடியுமா? நிச்சயம் முடியும்! ஒரு குளுகுளு மூலிகை உண்டு. அதன் பழங்களை `லிப்ஸ்டிக்’ பழங்கள் என்று அழைப்பார்கள் முந்தைய தலைமுறை சிறுவர் சிறுமியர். பழங்காலம் முதலே இயற்கையாக முகத்தை மெருகேற்றிக்கொள்ள பல்வேறு மூலிகை ரகங்களும் அவற்றின் சாரங்களும் பயன்பட்டு வந்திருக்கின்றன! அவ்வகையில் ’பசலை’ எனும் மூலிகையின் செவ்விய பழங்களை விரல்களுக்கு இடையில் வைத்துப் பிசைந்து உதடுகளில் பூசிக்கொள்ளும் வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது. பசலையின் நிறத்திற்கு, அதிலுள்ள `ஆந்தோசையனின்கள்’…

பார்ட்டி, போதைப்பொருள் டெஸ்ட், ரிசல்ட் நெகட்டிவ்: ஃபின்லாந்தின் இளம் பெண் பிரதமருக்கு நடந்தது என்ன?

உலகின் மிக இளம்வயது பெண் பிரதமர் என்ற சிறப்புக்குரியவர் சன்னா மரீன். 2019-ம் ஆண்டு 34 வயது நிரம்பிய இவர் ஃபின்லாந்து பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்லாந்தின் ஆளும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.பின்லாந்தின் இளம் பெண் பிரதமர் சன்னா மரீன்உக்ரைன் ரஷ்யா போரின் விளைவாக, மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணைய இவர் எடுத்துவரும் முயற்சியால் அனைவராலும் அறியப்பட்டவர்.கடந்த வாரங்களில் அடுக்கு மாடு குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பார்ட்டியில்…

அதிமுக பொதுக்குழு செல்லாது விவகாரம் மேல்முறையீட்டு மனு தீர்ப்பு சாதகமாக அமையும்: மாஜி அமைச்சர் உதயக்குமார் பேட்டி

உசிலம்பட்டி: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தீர்ப்பு சாதகமாக அமையும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நேற்று முன்னாள் அமைச்சர் உதயக்குமார் எம்எல்ஏ அளித்த பேட்டி: அதிமுகவின் ஒற்றை தலைமை கோரிக்கையை ஏற்று ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பாக 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்தனர். அதிமுக பொதுக்குழுவும் நீதிமன்றத்தின்…

தோல் புற்றுநோய்… தடுப்பது எப்படி? | How to prevent skin cancer?

நன்றி குங்குமம் டாக்டர் சமீபத்தில் நடுத்தர வயதுள்ள ஒருவர் என்னிடம் தோல் நோய்க்காக சிகிச்சைக்கு வந்தார். அவருக்குத் தொடையில் பல வருடங்களாக ஒரு மச்சம் இருந்திருக்கிறது. இதுநாள் வரை அது எந்தப் பிரச்னையும் செய்யவில்லை. இப்போது சில வாரங்களாக அது பெரிதாக வளர்ந்திருக்கிறது. கொஞ்சமாக அதன் நிறமும் மாறியிருக்கிறது. அதற்காகக் குடும்ப மருத்துவர் என்கிற முறையில் என்னிடம் வந்திருந்தார்.அவரைப் பரிசோதித்துவிட்டு, ‘நீங்கள் ஒரு தோல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது’ என்றேன். அவர் ‘ஏன், டாக்டர்,…

சிக்கந்தர் ரசா பேட் செய்த விதத்தை கண்டு ‘ஆட்டம்’ கண்டுவிட்டோம்: அக்சர் படேல் | The way Sikandar Raza batted we felt the game was taken away from us Axar Patel

ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரசா பேட் செய்த விதத்தை பார்த்து, ஆட்டம் எங்கள் கைநழுவி சென்றதாக உணர்ந்தோம் என இந்திய ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டி இருந்தது ரசாவின் இன்னிங்ஸ் எனவும் சொல்லலாம். இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்த தொடரை 3-0 என்ற கணக்கில்…

cut down 1 gram of salt per day to reduce high blood pressure and heart disease | தினசரி உணவில் ஒரு கிராம் உப்பை குறைத்தாலே உயர் இரத்த அழுத்தம் , இதய நோய்களை தவிர்க்கலாம்

உப்பு அதாவது சோடியம் குளோரைடு நமது உணவின் இன்றியமையாத அங்கமாகும். உப்பு நம் உடலில் திரவ அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தசைகளை தளர்த்துகிறது மற்றும் நரம்பு தூண்டுதல்களை பராமரிக்கிறது. உடலின் சரியான செயல்பாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பு அவசியம் தேவை. அதேசமயம் அதிக உப்பு உட்கொள்வதால் சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்களால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதை எப்படி தவிர்க்கலாம் என பல…

“பிகினி ஆடை படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்ததால் வேலை இழந்தேன்” – கொல்கத்தா ஆசிரியை விவகாரம் விரிவான தகவல்

கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி23 ஆகஸ்ட் 2022, 08:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் ஒரு புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மோசமான சர்ச்சையில் சிக்கியது.செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியை ஒருவர் பிகினி உடையில் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததற்காக தான் வேலையை விட்டுச்செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பிபிசியிடம் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை பல்கலைக்கழகம்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கு 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின்…

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா.. ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கோவிட் -19 பாசிட்டிவ்  என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவே. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசியக் கோப்பையில் விளையாட ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லவுள்ள அணியுடன் திராவிட் எப்போது சேர முடியும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்திய ஜிம்பாப்பே ஒருநாள் தொடருக்கு ராகுல் திராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்…