`தேசமே பெருமை கொள்ளப்போகும் இன்னொரு தருணம்'- வரலாறு படைப்பாரா நீரஜ் சோப்ரா? சவால்கள் என்னென்ன?
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் முடிந்து ஏறக்குறைய முழுமையாக ஒரு ஆண்டு நிறைவடைய இருக்கிறது. அந்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெரும்புகழைத் தேடித்தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்னும் ஓயவில்லை. அவர் வீசும் ஈட்டிகள் இன்னும் வேகமாக காற்றைக் கிழித்து பாய்ந்துக் கொண்டிருக்கின்றன. சாதனை மேல் சாதனை செய்து வருகிறார். நாளையும் ஒரு வரலாற்று சாதனையை செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.அமெரிக்காவின் யூஜினில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உலகின் தலைசிறந்த தடகள வீரர்,…








