கரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோகித் சர்மா | rohit sharma starts net practices after recovering from COVID19 in UK
லண்டன்: கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீண்டுள்ள நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். இது இந்திய அணிக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்த பயணத்தில் இரு அணிகளும் விளையாடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது. இருப்பினும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட…









