செயல்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு கோரிக்கை
டெல்லி : செயல்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தி உள்ளார். மக்களவை, சட்டப்பேரவை உள்ளிட்ட நாட்டின் அனைத்து தேர்தல்களையும் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆணையத்தில் பதிவு செய்யும் கட்சிகளுக்கு வருமான வரி சலுகை உள்ளிட்ட சில சலுகைகள் கிடைக்கும். இதற்காக பலர் பெயருக்கு ஒரு கட்சியை…









