பாஜ தலைவரின் குற்றச்சாட்டு பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பதுபோல் உள்ளது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி
சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகள், பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பதுபோல் உள்ளதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா சென்னை உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே நேற்று நடைபெற்றது. திமுக சட்டத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக சட்டத் துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் விடுதலை, சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன், மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…









