9வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த மார்ச் 8ம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. அதன்பின்னர் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதற்கான ஆயத்தப் பணிகள் கூட தொடங்கப்படவில்லை. இந்தியாவில் 70 கோடிக்கும் கூடுதலான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உண்டு. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆணையம் செயல்பாட்டில்…









