ஐபிஎல் இறுதி போட்டியில் கால்பதிக்க மும்முரம்: ராஜஸ்தான் – குஜராத் இன்று பலப்பரீட்சை | Rajasthan Royals Vs Gujarat Titans
கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் மோதுகின்றன. அறிமுக அணியான குஜராத் லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தது. முதல் முறையாக கேப்டனாக ஹர்திக் பாண்டியா, மட்டை வீச்சு, பந்து வீச்சு என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி அணியை அற்புதமாக வழிநடத்தி வருகிறார். சுழலால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் ரஷித்…









