19 வயதில் சிறைக்கு சென்று 50வது வயதில் விடுதலையானார் பேரறிவாளன்!: பேரறிவாளன் வழக்கு கடந்த வந்த பாதை
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 19 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 50வது வயதில் விடுதலையானார். 30 ஆண்டுகள் இவ்வழக்கு கடந்து வந்த பாதை… *1991-ம் ஆண்டு மே, 21-ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார். 1991 ஜூன் 11-ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, நளினி-முருகன் தம்பதியினர்…