MI v KKR: புயலாக வீசிய பும்ரா; கம்மின்ஸ் மாஸ்டர் கிளாஸ்… பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!
புள்ளிப் பட்டியலின் அடியில் உள்ள அணிகள்தான் என்றாலும், வெற்றி தோல்வி பாதிக்காத யோக நிலையை மும்பை எட்டி விட்டிருந்தாலும், கேகேஆருக்கோ இந்த மோதல் கடைசி வாய்ப்பானது.வெங்கடேஷைத் தவிர்த்து, ஃபயர் பவர் ஓப்பனர்கள் யாருமே இல்லை என்பதுவே தொடருக்கு முன்னதாக கேகேஆரின் பலவீனமாகக் கருதப்பட்டது. ஆனால், வெங்கடேஷும் இல்லை என்பதுதான் அவர்களது ரன்குவிப்புக்குத் தடா போட்டது. மிடில், டெத் ஓவர்களில் என்னதான் ரன்களை ஏற்றினாலும், தொடக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவை அவர்களால் சரி செய்யவே முடியவில்லை. எனவேதான், வென்றே ஆக…