ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல இரான் அனுமதி அளித்ததா?

Share

இந்தியக் கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான்  அனுமதித்ததாகக் கூறப்படும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமையன்று  தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ரந்தீர் ஜெய்ஸ்வால்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியக் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதித்ததாகக் கூறப்படும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமையன்று மாலை செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் இரானிய வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.

“வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், இரானிய வெளியுறவு அமைச்சரும் சமீப நாட்களில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடைசி உரையாடலில், கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தாண்டி கருத்து தெரிவிப்பதற்கான காலம் இன்னும் வரவில்லை” என்றார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

இந்நிலையில் எஸ். ஜெய்சங்கர் வியாழக்கிழமை இரவு இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சியுடன் பேசினார்.

மார்ச் 13, வெள்ளிக்கிழமை அன்று எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று இரவு இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சியுடன் மீண்டும் ஒருமுறை உரையாடினேன். இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பிரிக்ஸ் (BRICS) தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது,” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com