ஹாங்காங் சூப்பர் சிக்ஸ்: தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமனம் | Dinesh Karthik to lead Team India in Hong Kong Super Sixes

Share

ஹாங் காங்: ஹாங் காங் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 7-ம் தேதி ஹாங் காங்கில் தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறும்போது, “ஹாங் காங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவது பெருமையான விஷயம்.

இது உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்ட ஒரு தொடராகும். நம்பமுடியாத அளவிலான சாதனைகளை படைத்த வீரர்கள் அடங்கிய அணியை வழிநடத்த நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அச்சமற்ற மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த கிரிக்கெட்டை விளையாடுவதே எங்களது நோக்கமாக இருக்கும்” என்றார்.

அக்.25-ம் தேதி சூப்பர் கோப்பை தொடக்கம்: சூப்​பர் கோப்பை கால்​பந்து தொடர் வரும் அக்​டோபர் 25-ம் தேதி கோவா​வில் தொடங்​கும் என அகில இந்​திய கால்​பந்து கூட்​டமைப்பு நேற்று அறி​வித்​தது.

ஒடிசா எஃப்சி தவிர ஐஎஸ்​எல் கால்​பந்து தொடரில் விளை​யாடும் அனைத்து கிளப்​பு​களும் சூப்​பர் கோப்பை தொடரில் பங்​கேற்க சம்​மதம் தெரி​வித்​துள்​ளன. ஐஎஸ்​எல் கிளப்​பு​களு​டன் இன்​டர் காஷி, ரியல் காஷ்மீர், கோகுலம் கேரளா எஃப்சி மற்​றும் ராஜஸ்​தான் யுனைடெட் ஆகிய நான்கு ஐ-லீக் அணி​களும் இணைந்து சூப்​பர் கோப்பை தொடரில் விளை​யாடும்.

இந்த தொடருக்​கான போட்டி அட்​ட​வணை நாளை வெளிடப்​படு​கிறது. வழக்​க​மாக இந்த தொடர் ஒவ்​வொரு ஆண்​டும் சீசனின் இறு​தி​யில் நடத்​தப்​படும். ஆனால் இம்​முறை சீசனில் தொடக்​கத்​தில் நடத்​தப்​படு​கிறது. சூப்​பர் கோப்​பையை வெல்​லும் அணிக்கு வரும் 2026-27 சீசனுக்​கான ஏஎஃப்சி சாம்​பியன்ஸ் லீக் 2 பிளே-ஆஃப் தொடரில் இடம் வழங்​கப்​படும் என்று இந்​திய கால்​பந்து கூட்​டமைப்பு தெரி​வித்​துள்​ளது.

ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் நீடிப்பு: சர்வதேச மகளிர் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்தியாவின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 818 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் மந்தனா 2 சதங்கள் விளாசியிருந்தார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 2 இடங்கள் முன்னேறி 727 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 651 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

அர்ஜெண்டினா – ஆஸி. நவ.12-ல் மோதல்: நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸியை உள்ளடக்கிய அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் நவம்பர் மாதம் கேரளாவுக்கு வருகை தந்து நட்புரீதியிலான சர்வதேச போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி ஆஸ்திரேலியாவுடன் மோதக்கூடும் எனவும் இந்த ஆட்டம் நவம்பர் 12 முதல் 18-ம் தேதிக்குள் கொச்சியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com