ஹர்திக் முயற்சி வீண்: இந்திய அணி தோல்வி | IND vs ENG 3-வது டி20 | ENG beat IND by 26 runs

Share

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 3-வது ஆட்டத்தில் ராஜ்கோட்டில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

இங்கிலாந்தின் பென் டக்கெட் மற்றும் பில் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இதில் சால்ட் 5 ரன்களில் வெளியேறினார். கேப்டன் பட்லர் 24 ரன்கள் எடுத்தார். பென் டக்கெட், 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 10 ஓவர்கள் முடிவில் 87 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. அதன் பின்னர் ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் விரைந்து ஆட்டமிழந்தனர். லியாம் லிவிங்ஸ்டன் 24 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் அடங்கும். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.

இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.

சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்பா ஓப்பனிங் இறங்கினர். இதில் சஞ்சு வெறும் மூன்று ரன்களுடனும், அபிஷேக் 24 ரன்கள் எடுத்திருந்தார். ஐந்தாவது ஓவர் தொடக்கத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களுடன் வெளியேற, திலக் வர்மா 18 ரன்களுடன் நடையை கட்டினார். ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை ஏற்ற உதவினார். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 6 ரன்கள், அக்ஸர் படேல் 15, துருவ் ஜுரேல் 2, ஷமி 7, ரவி பிஷ்னோய் 4, வருண் சக்ரவர்த்தி 1 என 20 ஓவர் முடிவில் இந்திய அணி 145 ரன்களுடன் தோல்வியை தழுவியது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com