நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இதில் அபிஷேக் சர்மா 18 ரன்கள், டிராவிஸ் ஹெட் 8 ரன்களுடன் வெளியேறினர். அடுத்தடுத்து இறங்கிய வீரர்களும் பெரிதாக சோபிக்க வில்லை. 7வது ஓவரில் இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி மட்டுமே அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். முஹம்மது சிராஜின் அதிரடியான பவுலிங்கில் 4 விக்கெட்டுகள் சரிந்தன.
இப்படியாக 20 ஓவர் முடிவில் 152 ரன்கள் எடுத்திருந்தது. சிராஜ் 4 விக்கெட், சாய் கிஷோர் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட் எடுத்திருந்தனர்.
153 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஓப்பனிங் வீரர் சாய் சுதர்ஷன் 5 ரன்களுடன் நடையை கட்டினார். ஆனால் மறுமுனையில் இறங்கிய ஷுப்மன் கில் 61 ரன் விளாசினார். அடுத்து இறங்கிய ஜாஸ் பட்லர் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறவே அடுத்ததாக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் எடுத்தார். ரூதர்ஃபோர்ட் 35 ரன்களுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது குஜராத் அணி.